இந்தியாவின் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட தவணைக்கான DA உயர்வு சதவீதத்தையும் அறிவித்தது. ஆனால் DA உயர்வை இதுவரை அமலுக்கு வரவில்லை. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியவர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். தற்போது இறுதியாக உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி உயர்வை சேர்த்து தற்போது 31% என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இதற்கு முன்னதாக திருத்தப்பட்ட ஓய்வூதிய விகிதத்தில் அல்லது 6வது ஊதிய கமிஷன் குழுவின் படி அவர்கள் தொடர்ந்து ஊதியம் பெறுவார்கள் அகவிலைப்படியை மேம்படுத்தப்பட்ட விகிதத்தில் பெறுவார்கள். நிதி துறையால் வெளியிடப்பட்ட உத்தரவின்படி கடந்த ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தற்போது உள்ள 189% அவர்களின் மாத அடிப்படை ஊதியத்தில் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் மாதாந்திர ஓய்வூதியம் 196% திருத்தப்பட்ட விகிதத்தில் DA பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை கூடுதல் தவனை தொகையை டிசம்பர் மாதத்தில் ரொக்கமாக செலுத்தப்பட்டு, டிசம்பர் மாதச் சம்பளத்தில் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.
மேலும் அரசு ஊழியர்களுக்கு முன்னதாக அதிகரிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் அல்லது 5 வது ஓய்வுதிய குழுவின் படி ஊதியத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு, தற்போது உள்ள 356% இருந்து 368 அடிப்படை ஊதியத்தில் திருத்தப்பட்ட விகிதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் ஜூலை முதல் நவம்பர் வரை உள்ள DA கூடுதல் தவணைக்கான நிலுவைத் தொகையை டிசம்பரில் பணமாக செலுத்தப்படும். மேலும் டிசம்பர் மாதத்தில் ஊழியர்களின் மாத சம்பளம் அதிகரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.