இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணி காலம் முடிந்த பிறகு மாதம்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை வேலையை விட்டு நின்றபின் பொருளாதார ரீதியாக யாருடைய உதவியும் இல்லாமல் அவர்களது வாழ்க்கையை நடத்த உதவுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டு தோறும் தங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியமாகும். தற்போது பரவி வரும் தொற்று காரணமாக அலுவலகத்திற்கு சென்று ஆயில் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு அவர்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால் இவர்களுக்கு உதவக்கூடிய வகையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அஞ்சல்காரரிடம் உங்கள் ஆதார் எண்,மொபைல் எண், ஓய்வூதிய அடையாள அட்டை எண் மற்றும் வங்கி விவரம் ஆகியவற்றை சமர்ப்பித்து கைரேகையை பதிவு செய்து டிஜிட்டல் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
அதனைத் தொடர்ந்து தற்போது திருப்பூர் மாவட்டத்தில் டிஜிட்டல் சான்றிதழ் சமர்பிக்க சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. திருப்பூர் தலைமை தபால் அலுவகத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 8667521689 என்ற எண்ணின் மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை தொடர்பு கொள்ளலாம்.