தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் வருகிற 27-ஆம் தேதிக்கு பதில் 22ஆம் தேதி ஆன்-லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories