Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்”…. திடீர் போராட்டம்…. பரபரப்பு…!!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள கோணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் தற்சமயம் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா உட்பட ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மாணவ மாணவிகள் விழா நடைபெறும் தினங்கள் மட்டும் சீருடைக்கு பதிலாக வண்ண உடைகள் அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் விழாக்கள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைய மாணவ மாணவிகள் சீருடைக்கு பதிலாக வண்ண உடை அணிந்து வந்தார்கள். இதனால் மாணவ மாணவிகளை கல்லூரி உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் 150-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்லூரி நுழைவாயில் நின்று தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள். இத்தகவல் அறிந்த நேசமணிநகர் காவல் துறையினர் விரைந்து வந்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதில் உடன்பாடு ஏற்பட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து மாணவர்கள் அடையாள அட்டை காண்பித்து கல்லூரிக்கு செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதனை அடுத்து மாணவ மாணவிகள் அடையாள அட்டையை காண்பித்து கல்லூரிக்குள் சென்று விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |