Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்…” தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”…. அமைச்சர் ஆய்வு…!!!

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சேர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்த இருக்கின்றன. இதனால் கல்லூரி வளாகம், முகாம் நடைபெறுகின்ற இடங்களை தொழிலாளர் நல திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலக கூட்டரங்கில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் துறை இயக்குனர் வீரராகவராவ், மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரன் ரெட்டி ,செல்லகுமார் எம்பி, ஒய். பிரகாஷ் எம். எல். ஏ., எஸ்.ஏ. சத்யா, இந்திய தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குனர் ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதன்பின் அமைச்சர் சி.வி கணேசன் நிருபர்களிடம் பேசிய தாவது, தமிழக முதலமைச்சர் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் இதுவரை 57 இடங்களில் முகாம்கள் நடைபெற்றது. அதில் 74,000 இளைஞர்கள் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று உள்ளார்கள். இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் பங்கேற்று தங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளலாம். ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இதில் 300க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

மேலும் இந்த முகாமில் பத்தாயிரத்துக்கு அதிகமான இளைஞர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பங்கேற்று இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி இருக்கின்றார். மேலும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அதிகாரிகள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர், பேருந்து, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. என்று தெரிவித்தார்.

Categories

Tech |