தமிழகத்தில் அரசு கல்லூரிகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகவே உள்ளது. ஆனால் சில கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தன. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு செய்யப்பட்டு கல்லூரி முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், ஓசூர், கொடைக்கானல், நாகர்கோவில், தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர், அவிநாசி, சங்கரன்கோவில், தரகம்பட்டி, அரியலூர், விழுப்புரம், கோவில்பட்டி மற்றும் கூடலூர் உள்ளிட்ட 37 அரசு கலைக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.