பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஹாரி தன்னை எந்த வித அடைமொழியும் இன்றி ஹாரி என்று அனைவரும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அறிவித்த இளவரசர் ஹாரியும், அவருடைய மனைவி மேஹனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் ராயல் எனும் பட்டத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என பிரிட்டன் ராணி எலிசபெத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்தின் எடின்பரோராவின் நகரில் நடைபெற்ற சுற்றுலா மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் தன்னை அரசு குடும்ப அடைமொழியோடு ராயல் ஹாரி என்று அழைக்காதீர்கள், ஹாரி என்றே அழையுங்கள் என்று வலியுறுத்தினார்.