தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
அந்தவகையில் அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநராக ஜெயசீலனை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார். இவர் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஆவார்.