Categories
மாநில செய்திகள்

அரசு சொகுசு பேருந்து விபத்து… 20 பேர் காயம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி 49 பயணிகளுடன் தமிழக அரசு சொகுசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இன்று காலை திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த பேருந்து விபத்துக்குள்ளானது. வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட  20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர்  அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |