புதுச்சேரி மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு காலியாக உள்ள அரசு உதவியாளர் பணியாளர் பணிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் காலி பணியிடங்கள் குறித்த சில தவறான பொய்யான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சு பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, அரசு துறைகளில் கடந்த 10 வருடங்களாக காலியாக இருக்கும் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் நேரடி ஆட்சேர்ப்பு மூலமாக மட்டுமே காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்ற தவறான சில தகவல்கள் பரவுகிறது. அனுபவம் இல்லாத ஆட்களை சேர்த்தால் நிர்வாக பணிகளில் சீர்குலைவு ஏற்பட்டு விடும். அதோடு உள்ளூர் மக்கள் அரசு பணிகளில் சேர்வதற்கான வாய்ப்பையும் இலக்க நேரிடும். கீழ்பிரிவு, மேல் பிரிவு மற்றும் எழுத்தர் பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கிறது. மேலும் இதன் காரணமாக இந்த பணிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் ஆட்களை நியமனம் செய்யக்கூடாது என்று சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.