Categories
தேசிய செய்திகள்

அரசு துறையில் 1 லட்சம் காலி பணியிடங்கள்…. மாநில முதல்வர் ஒப்புதல்….!!!!

பஞ்சாப் மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அம்மாநில முதல்வர் சர்தார் உஸ்மான் புஸ்தார் ஒப்புதல் வழங்கியுள்ளார். பஞ்சாப் மாநில அரசுத் துறையில் அதிக அளவில் காலி பணியிடங்கள் உள்ளது. கல்வித் துறையில் காலியாக உள்ள 33 ஆயிரம் பணியிடங்கள் முதற்கட்டமாக 16 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆரம்ப சுகாதார துறையில் காலியாக உள்ள 1,200 பணியிடங்கள், சிறப்பு மருத்துவம் 2900, உயர்கல்வி 2600, கல்லூரி ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் 3500, சிவில் பாதுகாப்பு 1200, சிறைத்துறை 4300 இதனைப் போலவே 4800 பட்வாரி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் போலீஸ் மற்றும் எல்லை இராணுவ போலீஸ் ஆகியவற்றில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதனைப் போலவே ஒவ்வொரு துறையிலும் காலி பணியிடங்கள் உள்ளது. இந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்புமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

Categories

Tech |