Categories
மாநில செய்திகள்

அரசு தேர்வர்களே!…. உடனே நோட் பண்ணுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு பணியாளர்களுக்கான 122 துறை தேர்வுகளின் விடைக்குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் இந்த மாதம் 1 முதல் 9-ஆம் தேதி வரை 151 துறை தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 122 துறை தேர்வுகளின் உத்தேச விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் அந்த இணையதளத்திற்கு சென்று விடை குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்த விடைக்குறிப்பை சரிபார்த்து அதில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால் தேர்வர்கள் உடனடியாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற 24-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை ஆதாரங்களுடன் மனுக்களை அனுப்பி வைக்கலாம் என்று தேர்வாணையம் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |