Categories
மாநில செய்திகள்

அரசு நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

உரிய ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சென்னை எழும்பூரில் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த மருத்துவத் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, எழும்பூரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கு வந்து மேடையில் உட்கார்ந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியில் நேரடியாக 1,000 மருத்துவர், செவிலியர் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் 100 செவிலியர் மட்டுமே பங்கேற்றனர்.

செவிலியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லை என அதிகாரியிடம் கோபமாக பேசிவிட்டு அரங்கில் இருந்து புறப்பட்டு சென்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன் பாதியிலேயே வெளியேறியதால் அதிகாரிகளும், அரங்கில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

Categories

Tech |