Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசு நிதி ரூ 27,00,000 மோசடி…. 3 பேர் மீது வழக்கு பதிவு… விசாரணையில் போலீசார்..!!

அரசு நிதியில் ரூ 27 3/4 மோசடி செய்த விளையாட்டு அலுவலர், ஊர் காவல் படை மண்டல தளபதி உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்ற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பல்வேறு பணிகளை செய்யாமல் செய்துவிட்டு  பொய்யாக கணக்கு காண்பித்து பணம் மோசடி  செய்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினருக்கு புகார் சென்றுள்ளன. இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் கடந்த 2015 – 2018 ஆம் வருடம் வரை அப்போதைய விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணிபுரிந்து வந்தவர் 44 வயதுடைய ஞானசேகரன், தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் உரிமையாளராக விழுப்புரம் வா.உ.சி தெருவில் வசித்து வந்த 42 வயதுடைய ரகுநாதன், ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலராக பணி புரிந்து வந்தவர் விழுப்புரம் கல்லூரி சாலை நாவலர் நெடுந்தெருவில் வசித்து வந்த தணிகாசலம் என்பவருடைய மகன் 23 வயதுடைய மணிகண்டன் ஆகியோர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிதியை பொய்யான ரசீது  மூலம் பணத்தை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் மேலும் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் பராமரிப்பு, விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு உணவு, விளையாட்டுப் பொருள்கள், சீருடைகள் வழங்குதல், உள் அரங்குகள் பராமரிப்பு, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் ஆட்களை வைத்து எனப் பல பணிகளை செய்யாமலே பணி செய்துள்ளதாக பொய்யான ரசீதியை அரசிற்கு அனுப்பி அரசின் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

கடந்த 2017 – 2018 ஆம் வருடம் ரூ 9,13,792 மற்றும் 2018 – 2019 ஆம் வருடம் ரூ 9,76,230 என ஆக மொத்தம் ரூ 18,90,022க்கான செக்கை ஞானசேகரன் சட்டவிரோதமாக ரகுநாதனுக்கு கொடுத்துள்ளார். அந்தச் செக்கை ரகுநாதன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் செலுத்தி பணத்தை வாங்கியுள்ளார். அந்தத் தொகையில் ரூ ஒரு லட்சத்திற்கு 20% தொகை ரகுநாதனுக்கும், 3 % தொகை மணிகண்டனுக்கும் ஞானசேகரன் கமிஷனாக கொடுத்துள்ளார்.

இவ்வாறாக மூன்று பேரும் கூட்டு சேர்ந்து அரசு நிதியை மோசடி செய்துள்ளனர். இதை தவிர பல பணிகள் மூலம் ரூபாய் 8,81,700 ஞானசேகரன் மட்டும் தனியாக மோசடி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து ஞானசேகரன், ரகுநாதன், மணிகண்டன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ஞானசேகரன் தற்போது மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியம் அலுவலராக சென்னை எழும்பூரில் பணிபுரிந்து வருகிறார். ரகுநாதன் ஊர் காவல் படை மண்டல தளபதியாக விழுப்புரத்தில் பணிபுரிந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |