Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு நிர்ணயித்தபடி சம்பளம், பணி பாதுகாப்பு வழங்கக்கோரி… ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் மனு…!!!

ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்தபடி சம்பளம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதியில் அரசுத் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் பின் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது, நாங்கள் கடந்த 2014ஆம் வருடம் முதல் 240 பேர் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருகின்றோம்.

பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களுக்கு அரசு நிர்ணயித்தபடி சம்பளம் வழங்கவில்லை. மேலும் எங்களுக்கு பணி பாதுகாப்பும் கொடுக்கவில்லை. எனவே அரசு நிர்ணயித்தபடி சம்பளம் எங்களுக்கு கொடுக்க வேண்டும். இதையடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்க பணி பாதுகாப்பும் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |