Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு நிறுவனங்களில் வேலை வேண்டுமா….? 4 கோடி ரூபாய் வரை மோசடி…. போலி அடையாளங்களுடன் சிக்கிய வாலிபர்கள்….!!

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை  ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையின் முன்பு  போலி அடையாள அட்டை மற்றும் முத்திரையுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இது குறித்து  தொழிற்சாலை அதிகாரி பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன்,  அந்த வாலிபரை பிடித்து விசாரித்தில் அவர்  மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் என்பதும், என்ஜினீயரான இவர் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தது  தெரிந்தது.

மேலும் இவரது  நண்பர்களான தினேஷ்குமார், கார்த்திக், கிறிஸ்டோபர் ஆகியோர்  மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளனர்.  அதாவது  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திருச்சி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் மற்றும்  அவர்களுக்குத் தெரிந்த வாலிபர்களிடம் மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனம் கனரக வாகன தொழிற்சாலை, என பல  நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி   25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பெற்றுள்ளது  தெரியவந்ததுள்ளது.

இவ்வாறு  150-க்கும் மேற்பட்டவர்களிடம் போலி ஆவணங்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி 4 கோடி ரூபாய் மோசடி செய்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானதில்   தினேஷ்குமார் என்பவர் இதே பணிக்காக 2018-ஆம் ஆண்டு ரூபாய் 4 லட்சம் கொடுத்து ஏமாந்து உள்ளார். அதனால் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

Categories

Tech |