Categories
மாநில செய்திகள்

அரசு நிலங்களை பாதுகாக்க ரூ.50 கோடி…. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அதன்படி அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக 50 கோடியும் , வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக 500 கோடியை ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தனது பட்ஜெட் உரையில் அரசு நிலங்களை குத்தகைக்கு விடும் சிக்கல்களை தீர்க்கவும் வெளிப்படையான குத்தகைக்கு விடவும் விரிவான நில குத்தகை கொள்கை வகுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

 

Categories

Tech |