சேலம் மாவட்டம் மேச்சேரியில் சேலம் மெயின் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலம் 53 சென்ட் உள்ளது. இதில் சில வீடுகள் மற்றும் கடைகள் அமைத்துக் குடியிருந்து வந்தனர். இது குறித்து மேச்சேரி அருகில் உள்ள கோனூர் ஆண்டிக்கரையை சேர்ந்த சின்னசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சந்தைப்பேட்டை பகுதியில் 10 வீடுகள், 3 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
இதற்காக அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வம், அவருடைய தாயார் சரோஜா ஆகிய இருவரும் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் அவர்களிடம் இருந்து மண்ணெண்ணையை கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியனர். அப்போது அவர்கள் எங்களுக்கு மாற்றிய இடம் வேண்டுமென்று கூறினர். அதனை தொடர்ந்து வீடுகள் கடைகளை இழந்தவர்களிடம் . இதனால் அந்த பகுதியில் காலையில் இருந்து மாலை வரை பரபரப்பு ஏற்பட்டது.