Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்…. விசாரணையில் உறுதியான தகவல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 16 சென்ட் நிலம் இருக்கிறது. இதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதனால் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் விசாரணை நடத்திய போது தனிநபர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது. அந்த நிலத்தை மீட்குமாறு தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரப்பின்படி திருக்காம்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் குறுந்தொகை, வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலத்தை மீட்டனர்.

Categories

Tech |