Categories
சினிமா

அரசு நிலத்தை ஆட்டைய போட்ட பிரபல தமிழ் நடிகர்…. திரையுலகமே அதிர்ச்சி….!!!!

அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கும் நடிகர் மன்சூர் அலிகான், தற்போது அரசு நிலத்தை ஆட்டைய போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சென்னை சூளைமேட்டில் அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூர் அலிகான் வீடு கட்டியுள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களில் இவருக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அவ்வகையில் சூளைமேடு பெரியார் பகுதியிலும் இவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது.

இந்த வீட்டை 2,500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளார். இதுதொடர்பாக புகார் வந்ததையடுத்து வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனால் கொதித்துப்போன மன்சூர் அலிகான் அதிகாரிகளுடன் சண்டை விட்டதாக கூறப்படுகிறது . இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |