தமிழகத்தில் கொரானா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி உயிர் தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவி இன்னும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை கண்டு பயந்து வீட்டிலேயே முடங்கிக் கி கிடந்தன. இந்த நிலையில் உயிருக்கு அஞ்சாமல் சாலைகள் மற்றும் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியாற்றினர்.
அவ்வாறு பணியாற்றியவர்கள் கடந்த மே மாதம் 84 காவல்துறையினர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 84 பேரில் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தலா ரூபாய் 25 லட்சம் வீதம் ரூபாய் 3.25 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டன. அதன் பின்னர் ஆட்சி மாறியதால் மீதமுள்ள உயிரிழந்த 71 நபர்களில் 36 நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முன்மொழிவுகள் பெறப்பட்டது. 36 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் வீதம் ரூபாய் 9 கோடி நிவாரண தொகையாக வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனைப்பற்றி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் கடந்த மே மாதம் 20ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,மீதியுள்ள 35 நபர்களின் வாரிசுகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான முன்மொழிகள் கிடைத்தவுடன் அவர்களுக்கும் தலா ரூபாய் 25 லட்சம் விளங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட காவலர்களின் வாரிசுகளுக்கு எந்த நிவாரணமும் போய் சேரவில்லை என்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணம்.
மேலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 3.25 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டது பற்றி அரசு ஆணையை டிஜிபி அலுவலகம் வழங்கியுள்ளது. ஆனால் கடந்த மே மாதம் 20ஆம் தேதி தமிழக முதல்வர் அறிவித்த உத்தரவு பற்றிய கேள்விக்கு இன்னும் பணிகள் முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பாண்டி 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி உயிரிழந்தார்.
ஆனால் இதுவரை அவரது வாரிசுகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. குடும்பத் தலைவர்களை கொரோனாவிற்கு பலிகொடுத்துவிட்டு நிவாரணத்திற்காக ஏங்கி நிற்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு உதவி செய்யுமா மற்றும் தமிழக முதல்வர் உதவி செய்வாரா என்று பாதிக்கப்பட்டவர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.