Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளில்…. பெண்களுக்கு 40% ஸ்பெஷல் இட ஒதுக்கீடு…. இதோ முழு விவரம்….!!!!!

உத்திரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்பு மாநில பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா பல வாக்குறுதிகளை வெளியிட்டு வந்தார்.

அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி பெண்களுக்கான முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மரியாதை, கல்வி, சுயமரியாதை, பாதுகாப்பு, தற்சார்பு, சுகாதாரம் என ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு வேலைகளில் 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் ஆரம்ப பள்ளிகளில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள், காவல் துறையில் ஒரு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.5 ஆயிரம் கோடியில் ஸ்டார்ட் அப் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |