பொதுவாக அரசுத்தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் குரூப்-1 உட்பட அனைத்து அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் புதிய அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திராவில் அனைத்து அரசுப் பணிகளுக்கும் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதை போல், தமிழ்நாட்டிலும் அனைத்து நிலை அரசுப் பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய அரசு முன் வரவேண்டும். எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரித்து, தகுதியானவர்களை தேர்வு செய்தால் அரசு பணிகளில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படுவதுடன் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.