மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு நாட்டின் பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இதுவரை இறுதியாக மத்திய அரசு ஊழியர்கள் 7 சதவீதம் டிஏ பெற்று வருகிறார்கள்.
தற்போது 2022 ஜனவரி 1 ஆம் தேதிக்கான டிஏ இன்னும் அரசால் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் AICPI கணக்கீட்டின் படி 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த செய்தி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோலி பண்டிகை பரிசாக அகவிலைப்படியை 31 ல் இருந்து 34 ஆக மூன்று விழுக்காடு அளவுக்கு மோடி அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி இந்த அறிவிப்பு பண்டிகைக்கு முன்னதாக வெளியாகலாம். மேலும், ஊதிய உயர்வு நிலுவைத்தொகை தொடர்பாகவும் எதிர்பார்க்கலாம்.