Categories
தேசிய செய்திகள்

அரசு பணி: இனி 3-ஆம் பாலினத்தவர்களும்…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

சமுதாயத்தில் 3ஆம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளின் முன்னேறத்துக்கு மத்திய-மாநில அரசுகள் பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கலாம் என மேற்குவங்காள அரசு முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து மேற்குவங்காள அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்க அனுமதியளிப்பது தொடர்பான மசோதா அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைபடுத்தப்படும் பட்சத்தில் மேற்குவங்காள அரசுப் பணியில் ஆண்கள், பெண்கள் போன்று திருநங்கைகளும் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கலாம். மேற்கு வங்காள அரசின் முடிவுக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

Categories

Tech |