ஆன்லைன் தேர்வு பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்றைய நவீன உலகில் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆன்லைனில் எழுத்து தேர்வுவும், வீடியோ காலில் நேர்முகத் தேர்வு நடத்தும் நடைமுறை கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகரித்துள்ளது. மத்திய அரசு துறைகளிலும் இந்த நடைமுறை விரைவில் வர இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசு பணிகளுக்கு தகுதி உடையவர்களை தேர்வு செய்ய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் அமைப்பு போன்றவை வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அரசுப் பள்ளிகளுக்கு தகுதித் தேர்வு செய்வதற்கு ஆன்லைன் வழியாக பொது தேர்வு நடத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படிதகுதித் தேர்வை நடத்துவதற்கான திட்டங்களை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு பணியாளர் தேர்வாணையம் போன்றவை நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க முடியும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஏற்கனவே மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் நீட் பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு பள்ளிகளில் சேர விரும்புவோருக்கு செக் வைக்கும் விதமாக பொதுத் தகுதி நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.