தமிழகத்தில் சுமார் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயில்கின்றனர் என்ற செய்தி அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கையை பெற்றோர்கள் இழந்துள்ளதை காட்டுகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளதும் , இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
எனவே பள்ளிகளின் கட்டமைப்பை முதலில் வலுப்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில், அதிகளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.