Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்…. பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழக பாடத்திட்டத்திற்கு பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர விரும்பும் பள்ளிகள் நாளைக்குள் உரிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கையின் படி சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |