Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா”….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

மாதந்தோறும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திரையிடல் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான மாணவர்களுக்கு உருவாகி தரும் நோக்கத்துடன் பல்வேறு கலை செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதம் தோறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திரையிடல் திட்டம் ஒன்றை சிறார் திரைப்பட விழா என பெயரில் வகுத்து வழங்கி வருகின்றது.

அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். கதைக்களம், உரையாடல், கதை நடக்கும் இடம், ஒலிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், ஒலி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ஸ்பாட்லைட் எனப்படும் நிகழ்வு நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு மாநில அளவில் ஒரு வாரத்துக்கு நடக்கும். இதில் பங்கேற்கும் மாணவர்களில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக சினிமா குறித்து மேலும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இந்த செயல்பாட்டிற்காக சில்வர் ஸ்கிரீன் ஆப் என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |