Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்…. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மொட்டை அடித்துக் கொண்டு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மதுரை கிளை நீதிமன்றமும் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறை திருத்தப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், இல்லம் தேடி கல்வி அமைப்பில் பணியாற்றியவர்களுக்கு  வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |