Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு…. தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு….!!!!

அரசு பள்ளிகளில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 40 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் வட்டார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் சீர்காழி பகுதியில் இருக்கும் 20 பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதை கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் புகழேந்தி, ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜா ஆகியோர் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் பள்ளியின் தரநிலை குறித்து ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு, மாணவர்களின் வருகைப் பதிவேடு, விலையில்லா பொருட்கள், பள்ளிகளுக்கு வழங்கிய மானியங்கள், மாணவர்களின் கற்றல்திறன், ஆய்வக பதிவேடுகள், கட்டிடத்தின் உறுதித்தன்மை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவைகளும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி அதை பின்பற்றுமாறு அதிகாரிகள்  உத்தரவிட்டனர்.

Categories

Tech |