பள்ளிப்பட்டு அருகே இருக்கும் அரசு பள்ளிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார்குப்பம் மற்றும் பாலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஆட்சியர் பள்ளி மாணவர்களிடம் ஏதாவது குறைகள் இருக்கின்றதா? என கேட்டறிந்தார்.
இதையடுத்து அவர் அம்மையார்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்குச் சென்று அங்கிருக்கும் சத்துணவு கூட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களுக்கு தயார் செய்து வைத்திருந்த சத்துணவின் தரத்தை பார்ப்பதற்காக ருசி பார்த்தார். பின்னர் பள்ளி கட்டிடத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.