Categories
தேசிய செய்திகள்

“அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு”… முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் 10 மற்றும் 12வது மாணவர்களுக்கு கடந்த 20 ம் தேதி அன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 27ஆம் தேதி என்றும் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு துறை தகவல் தெரிவித்து இருக்கின்றது. அதனால் அரசு பள்ளிகளில்  தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கிடையே இடைநீக்கம்  அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டில் வருடத்திற்கு 35 ஆயிரம் கோடி வரை அரசு பள்ளிகளுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது அரசு பள்ளிகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் உட்பட அலுவலக பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களில் வரி பணத்தால் செயல்படுத்தப்படும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பது பொது மக்களை மிகுந்த வருத்தம் அடைய செய்கிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

அதனால் இதனை தடுக்கும் விதமாக தற்போது அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பாகவும் மாணவர்களின் கல்வி மதிப்பெண் குறைந்தது தொடர்பாகவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். அத்துடன் எந்தெந்த பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பது என்பதை கண்டறிந்து பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றார். அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |