திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசு பள்ளி மாணவி-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கை பனைமலை பேட்டையில் உள்ள அரசு பள்ளி-மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். அதன் பிறகு மாணவர்களிடம் எம்எல்ஏ புகழேந்தி பேசினார். அவர் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். அதன்பிறகு உயர்கல்வித்துறைக்கு 6000 கோடி ரூபாயும், பள்ளிக்கல்வித்துறைக்கு 36 ஆயிரம் கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அரசு பள்ளிக்கு சென்றபோது ஒரு மாணவி காலை உணவு சாப்பிடாமல் பள்ளியில் மயங்கி விழுந்தார். இதன் காரணமாக ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த காலை சிற்றுண்டி திட்டத்தால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின்படி 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வுகள் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஏற்க மாட்டார். இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அரசு பள்ளியில் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தனியார் பள்ளிகளின் மோகம் குறைந்து, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் நூலகவசதி மற்றும் ஆய்வக வசதி அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.