சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் வகுக்கப்படவில்லை என்றால் சமூகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறை கூட மாற்றுத்தக்கது அல்ல. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்த போது அடிப்படையில் மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்பதை சட்டத்தில் 17-ல் ஒரு பக்கம் சொல்கிறது. இதை நாம் தமிழகத்தில் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
அதன் பிறகு ஆளுநர் அவர்கள் ஒரு பல்கலைக்கழக விழாவில் போது இந்தியா மத சார்பற்ற நாடு என்று சொல்வதற்கு பதிலாக மத சார்புடைய நாடு என்று சொன்னார். அவர் அப்படி சொல்லி இருக்கக் கூடாது கண்டிப்பாக அந்த வார்த்தையை தவிர்த்து இருக்க வேண்டும். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அரசு ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்ற சட்டமன்ற நிதியை முதல்வர் பயன்படுத்த இருக்கிறார். மேலும் ஒரு பள்ளிக்கு ஒரு வகுப்பறையை அதி நவீன வசதிகளுடன் கட்ட முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.