புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது மட்டுமல்லாமல் சத்துணவு முட்டை வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி முதல் கட்டமாக 293 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் இரண்டு முட்டை வீதம் சுழற்சி முறையில் அனைத்து பள்ளிகளுக்கும் வாரம் ஒரு லட்சம் சத்துணவு முட்டை விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.