ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இனி பால் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வருகை விகிதம் அதிகரிக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் சுமார் 69.21 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பால் பவுடரில் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்படும் என்று நம் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த நாட்கள் விடுமுறை என்றால் அடுத்த கல்வி நாளில் பால் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 150 மில்லி பாலும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 200 மில்லி பாலும் வழங்கப்படும். ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பிலிருந்து பால் பவுடர் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.