ஹரியானா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுமார் 2,075 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 2,069 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக இரண்டு மாத காலத்திற்குள் 4,100 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணியிடங்கள் ஹரியானா கவுசல் ரோஸ்கர் நிகாமின் உதவியுடன் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்கள் முழுவதுமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த மாதம் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.