உத்திரபிரதேச மாநிலம் குஷி நகரில் உள்ள அரசு பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் விலை உயர்ந்த மதுபானங்கள் அடங்கிய 51 அட்டை பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். உடனே ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அனைத்து மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த பகுதி பீகார் எல்லையை ஒட்டி இருப்பதாக கூறப்படுகிறது இதனால் பள்ளிகளிலேயே மது கடத்தல் காரர்கள் மது பாட்டில்களை வைத்திருந்து கடத்தினார்களா என சந்தேகிக்கப்படுகிறது. இதனை அடுத்து இந்த வழக்கில் பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் பேசியபோது பள்ளியில் சில கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. அந்த அறை பொருட்களை வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது அந்த அறையின் சாவி கிராம தலைவரிடம் வைக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் மதுபானம் பதுக்கி இருப்பது பற்றி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரித்தேஷ் குமார் சிங் பேசும் போது. பள்ளியில் இருந்து 51 மதுபான பெட்டிகள் மீட்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து கலால் துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பீகாரில் மதுவிலக்குக்கு பின் ஆம்புலன்ஸ்களிலும் சில சமயங்களில் மருந்துகளுக்கு நடுவிலும் மறைத்து வைத்து கடத்தல் கார்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து பீகாரருக்கு மதுபானங்களை கடத்துகின்றனர். உத்தரப்பிரதேசம் பீகார் எல்லையில் இருப்பு வைத்து அதன் பின் சந்தர்ப்பம் பார்த்து பீகாருக்குள் மது கடத்தப்படுகிறது.