Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வட மாநிலங்களில்  சமீபத்தில் வெப்ப அலையை சமாளிக்க பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சூரிய ஒளியில் குழந்தைகளை  விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகளை அதிகாலையில் திட்டமிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இதற்கிடையில் வருகிற மே 24-ஆம் தேதி சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மற்றும் ஜூன் 15-ஆம் தேதி, 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவடையும். இந்நிலையில் நகரத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஜூன் நடுப்பகுதிக்குப் பிறகு கோடை விடுமுறையை அறிவிக்க உள்ளனர். எனவே அரசு பள்ளிகளில் கோடை விடுமுறையை முன்னிட்டு, வகுப்புகள் நடத்தப்படாவிட்டாலும், திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்றும் முன்னதாக கோடை விடுமுறைகள் மே மாதம் 30-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது அவை மே 23-ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை தொடரும். இவ்வாறு சண்டிகரின் பள்ளிக்கல்வி இயக்குனர் பாலிகா அரோரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நகரில் கடும் வெப்பம் நிலவி வருவதால், ஆசிரியர்களின் கவலையை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை யூனியன் அரசு கல்வித்துறை நீட்டித்து, மாணவர்களுக்கு 39- நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு கல்வி செயலாளர் பூர்வா கர்க் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் ஆசிரியர்கள் ஜூன் மாதம்  29-ஆம் தேதி பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அதன் பின்  ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |