கோவையில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் 113 அரசின் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான மேல்நிலை படிப்பு மற்றும் திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கோவையில் உள்ள 150 அரசு பள்ளிகளை, பாரதியார் பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 40க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தத்தெடுத்துள்ளது. அதற்காக கல்லூரிகளுடன் அரசு பள்ளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக 150 அரசு பள்ளிகளை, கல்லூரிகள் தத்தெடுத்து 2 ஆண்டுகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்க உள்ளனர். இந்த பயிற்சியின்போது கல்லூரியில் உள்ள படிப்புகள், கட்டமைப்புகள் குறித்தும், சிறப்பு திறன் மேம்பாடு பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.
மேலும் கணினி வகுப்புகள், பயிற்சி போட்டிகள் வைத்து சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன் முதல் கட்டமாக 40 கல்லூரிகள் தலா 5 முதல் 6 அரசு பள்ளிகளை தத்தெடுத்துள்ளனர். இனி வரும் நாட்களில் 100 கல்லூரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை தத்துதெடுத்து பல்வேறு பயிற்சிகளை அழிக்க உள்ளது. அதனை தொடர்ந்து கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியது, முதல்வர் கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறைகள் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்த திட்டமாகும். கோவையில் பல்வேறு கல்லூரிகள் அரசு பள்ளிகளை தடுத்ததெடுக்க முன் வருகின்றன. அதன்படி 10 நாட்களில் 40 கல்லூரிகள் 150 அரசு பள்ளிகளை தத்தெடுதுள்ளனர். இதில் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். மிகச் சிறப்பாக செயல்படும் கல்லூரிகள் நிர்வாகத்தினரை முதல்வரே நேரில் சந்தித்து பாராட்ட ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.