தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூபாய் 19. 18 கோடியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளுக்கு மானியத் தொகையாக விடுத்துள்ளது.