Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளிகள்” கண்டிப்பாக இதை செய்யக்கூடாது…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் எச்சரிக்கை….!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மதுரை, புதுக்கோட்டை, நாகமலை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி சார்ந்த அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல் படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்றார். இந்தத் திட்டம் ‌குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகளுக்கு தலைமை பண்பை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்பிறகு வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழகமானது கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் உள்ளிட்ட 10 உபகரணங்கள் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்த உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு பள்ளிகள் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கக்கூடாது. இதை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சீரமைக்கப்படாத கட்டிடங்களில் மாணவர்களை அமர வைக்க கூடாது என்றும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும் இதற்கு முன்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியில் பேசினார். அவர் கடந்த 2 வருடங்களுக்குப் பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது அதிகரித்துள்ளதாகவும், ஏராளமான பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது எனவும், மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் கடமை என்றும் கூறினார்.

Categories

Tech |