Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகள்… “பெருமையின் அடையாளமாக மாறும்”… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நம்பிக்கை….!!!

2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக மூன்று நாள் வரை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தார். தமிழகத்தில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளீர்கள். ஒவ்வொரு மழையிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருவதால் புதிய திட்டங்களை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து கல்வியில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதில் அளிக்க கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த நிதிநிலை அறிக்கை ஆறு மாதத்திற்கு மட்டுமே, அடுத்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, அது மறுமையின் அடையாளமாக விரைவில் மாறும் என்று தெரிவித்தார். இதையேதான் மக்களும் எதிர்பார்க்கின்றனர். தனியார் பள்ளிகளை வளர்த்துவிட, அரசு பள்ளிகள் கவனிக்காமல் விட்டதால் இந்த நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

Categories

Tech |