ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை அளவீடு செய்து அதிகாரிகள் மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஏலமன்னா பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் தனி நபர் ஒருவர் பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தேயிலை சாகுபடி செய்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அம்ரித், கூடலூர் ஆர்.டி.ஓ சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி அதிகாரிகள் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தனர். அப்போது 7 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து வருவாய்துறையினர் தேயிலை செடிகளை அகற்றி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.