கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பள்ளி வளாகத்தில் புதிய காரை ஓட்டிப் பார்த்து ஆசிரியை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிய காரை ஓட்டிய போது நிலைதடுமாறி சுவற்றில் மோதியதில், ஆசிரியை அமராவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆசிரியை உயிரிழந்ததை அடுத்து அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் யாரும் ஈடுபடக் கூடாது என்ற பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.