தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஆல்பாஸ் செய்யப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கத்தில் உள்ள கிராமம் ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் போதிய அளவு மாணவர்கள் இல்லாததால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்குவிக்கவும் முன்னாள் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இணைந்து பல முயற்சிகளை செய்து செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடத்தில் புதிதாக சேரும் மாணவர்கள் பெயரில் போஸ்ட் ஆபிசில் ரூ.1000 டெபாசிட் செய்தும், பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் ரூ.10000 பரிசுத்தொகை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளியில் தங்களுடைய குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.