எச்.சி.எல் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் போன்றவை இணைந்து வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வேலையில் அமர்த்தப்பட இருக்கின்றனர். வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் பள்ளியில் இதற்கான தேர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் அவர்கள் உயர்கல்வி தொடர்வது பற்றி பேசினார். இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
Categories