Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீர் மயக்கம்”…. பதட்டத்தில் பெற்றோர்கள்…!!!!

ஊத்தங்கரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததால் பெற்றோர்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லாவி அருகே உள்ள சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் திடீர் என்று மயங்கி விழுந்தனர்.

இதை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவர்களை அனுமதித்தனர். தொடர்ந்து மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மாணவர்கள் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |