Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்…. ஆசிரியர்கள் அத்துமீறல்…!!!

ஒரு அரசு பள்ளியில் மாணவர்களை வைத்து, பள்ளி கழிவறையை சுத்தம் செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை என்ற ஊருக்கு அருகேயுள்ள முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றன. மேலும் இப்பள்ளியில் ஒரு  தலைமையாசிரியை மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் ஒரு மாணவனும் மற்றும் ஒரு குழந்தையும் இணைந்து பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதை வீடியோவாக பதிவு செய்கிறார். மேலும் மாணவர்களிடம் நீங்கள் ஏன் சுத்தம் செய்கிறீர்கள்? என்று கேட்ட போது, ஆசிரியர்கள்தான் பள்ளிக்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் இவ்வாறு சுத்தம் செய்யவேண்டும் என கூறியுள்ளதாக அந்த மாணவர் தெரிவிக்கிறார்.

மேலும் இதனை தொடர்ந்து மாணவி ஒருவர் பேசியதாவது, பள்ளி வளாகத்தையும் நாங்கள் சுத்தம் செய்து கொள்வோம் என்றும் அதேபோல் கழிவறையையும் யார் முதலில் பள்ளிக்கு வருகிறார்களோ, அவர்கள் சுத்தம் செய்வார்கள் என்று கூறியுள்ளார். இவ்வாறு பள்ளி மாணவர்களை சொந்த வேலை மற்றும் வளாக சுத்தம் போன்றவற்றுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில், குறிப்பிட்ட சமூக மாணவர்கள் மட்டும் வைத்து கழிவறை சுத்தம் செய்யப்படுகிறதா? அல்லது அனைத்து மாணவர்களுக்கும்  சுய ஒழுக்கம் கற்பிக்க  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா?  என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆகவே தமிழக அரசு இந்த பிரச்சினையை குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |